ஐந்து நாட்களுக்குள் மரக்கறிகளின் விலை 40 முதல் 54 வீதம் வரை குறைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த தெரிவித்தார்.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி கெரட் கிலோவொன்று 900-950 ரூபாவாகவும், வெண்டைக்காய் கிலோ 340-360 ரூபாவாகவும், பீட்ரூட் கிலோ 400-420 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு 3000-320 ரூபாவாகவும் பதிவாகியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார மையத்தில் செயல்படும் ஒரு அமைப்பின் படி விலை நிர்ணயிக்கப்பட்டது, எந்த மாஃபியாவும் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டில் இருந்து காய்கறிகளை கொண்டு வர அரசு வேலை செய்தால், முதலில் விவசாயிகள், பொருளாதார மைய அதிகாரிகள், தொழிலதிபர்கள், நாங்களும் சேர்ந்து வீதிக்கு இறங்குவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக கூறியுள்ள அவர், உணவுக் கொள்கைக் குழு இது தொடர்பில் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்குள் காய்கறிகளின் விலை குறைக்கப்படும் எனக் கூறிய அவர், மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.