- Advertisement -
- Advertisement -
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகள் பலர் இன்று (21.01) ஹட்டனுக்கு விஜயம் செய்திருந்தனர்.
ஹட்டன் டன்பார் விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் விஜயம் செய்திருந்தனர்.
பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சன்யுக்தா மற்றும் மீனாச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த தேசிய தைப் பொங்கல் நாளில், தமிழ் மக்கள் 1008 புதுபானைகளில் பொங்கலிட்டுள்ளனர். அத்துடன் மேலும் பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
- Advertisement -