- Advertisement -
- Advertisement -
முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு 10 வயது குழந்தையொன்று நேற்று (20.01) மாலை உயிரிழந்துள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஊஞ்சலில் பயணித்த குழந்தையின் கழுத்தில் கயிறு சிக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரசாந்த் தனோஷ் என்ற குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தை உடனடியாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் நடைபெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -