- Advertisement -
- Advertisement -
18 வயது பூர்த்தியடைந்த 100,000 இளைஞர்கள் குழு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2023 வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது இது தெரியவந்துள்ளது. அதன்படி, 2023ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் இளம் வாக்காளர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
இவ்வறுடத்தின் இறுதி பகுதியில் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -