Sunday, March 16, 2025

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு!

- Advertisement -
- Advertisement -

தற்போது பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்டுள்ளது.

தற்போது குளத்திற்கு வரும் நீர் வரவு அதிகரித்துள்ள நிலையில் குளத்தின் 14 வான் கதவுகளில் 08 வான் கதவுகள் 06 அங்குலத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளன.

குளத்தின் கீழுள்ள தாழ் நிலப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular