Sunday, March 16, 2025

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 963 பேர் கைது!

- Advertisement -
- Advertisement -

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் கீழ் இன்று (19.01) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 963 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 638 சந்தேக நபர்களும் குற்றவியல் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 325 சந்தேக நபர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 10 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாகவும்,  போதைக்கு அடிமையான 08 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular