நுவரெலியா பொருளாதார நிலையத்தில் மரக்கறி கொள்வனவு மற்றும் தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு மரக்கறிகளின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும், மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது நுவரெலியா பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் விலையை பொருளாதார மத்திய நிலையம் தீர்மானிக்காது.
விவசாயிகள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்களால் மரக்கறிகளின் விலைகள் குறித்த தீர்மானம் எடுக்கப்படுகின்றன. விலை ஏறிய எல்லா காய்கறிகளையும் நிறைய விவசாயிகள் பயிரிட ஆரம்பித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.