Saturday, March 15, 2025

கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் பலி!

- Advertisement -
- Advertisement -

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இன்று (18.01) புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர்  பலியாகியுள்ளார்.

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான ரிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் புகையிரத அதிகாரிகளால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular