Monday, March 10, 2025

பொலிஸாரின் யுக்திய நடவடவடிக்கையின் கீழ் 943 பேர் கைது!

- Advertisement -
- Advertisement -

நாடளாவிய ரீதியில் நீதி காவற்துறை நடவடிக்கையின் கீழ் நேற்று (17) முதல் இன்று (18) காலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 943 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த குழுவில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 670 சந்தேக நபர்களும் குற்றவியல் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 273 சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 670 சந்தேக நபர்களில் 9 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைக்கு அடிமையான 25 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 32 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular