- Advertisement -
- Advertisement -
வற் வரி அதிகரிப்பின்றி அதிகளவான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு சவர்க்காரம், கொலோன், பவுடர், பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பல பொருட்களை வற் இன்றி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சதொச தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக லங்கா சதொச நிறுவனத்திடமிருந்து பல அத்தியாவசியப் பொருட்களை நடைமுறையில் உள்ள சந்தை விலைகளை விட மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
வற் வரி (பெறுமதி சேர் வரி) காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -