Thursday, March 13, 2025

இன்றும் தொடரும் தாதியர்களின் போராட்டம்!

- Advertisement -
- Advertisement -

அரச தாதியர் சங்கம் இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை காலை 7.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சருக்கும், நிதி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்பார்த்த நல்ல பதில் கிடைக்காத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர்  சுதத் ஜயசிறி தெரிவித்தார்.

இதேவேளை, பல சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (17.01) காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இடைக்கால மருத்துவ கூட்டு முன்னணி தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் தொழில் நடவடிக்கையை ஆரம்பிக்கப்படும் என அதன் தலைவர் திரு.உபுல் ரோஹன தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA