- Advertisement -
- Advertisement -
இன்று (16) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேர நீதி நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 877 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு 475 கிராம் ஹெரோயின், 501 கிராம் ஐஸ் போதைப்பொருள், 7 கிலோ 900 கிராம் கஞ்சா, 3,605 கஞ்சா செடிகள், 305 கிராம் மாவா, 126 மாத்திரைகள், 137 கிராம் மதன மோதகம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 877 சந்தேக நபர்களில் 04 சந்தேகநபர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -