Sunday, March 9, 2025

நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள்!

- Advertisement -
- Advertisement -

சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16.01) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன.

அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க சுகாதார சங்கங்களும் தீர்மானித்துள்ளன.

எனினும் இன்று காலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுகாதார தொழிற்சங்கங்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை வழங்கினால், வேலை நிறுத்தம் தொடரும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular