Sunday, March 9, 2025

யாழில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் மோசடி!

- Advertisement -
- Advertisement -

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் மோசடி செய்த நபர் ஒருவர்  யாழ்ப்பாணத்தில்  கைது செய்யப்பட்டார்.

யாழ் மாவட்ட விசேட குற்றவிசாரணை பிரிவில் யாழ்வாசி ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி 23 இலட்சம் ரூபாயை மோசடி செய்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழு பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரை நெல்லியடி பொலிஸ் பிரிவில் தலைமறைவாக இருந்தபொழுது கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்டவர் சுன்னாகம் உடபட யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் போலி விசாக்களை பயன்படுத்தி பத்துக்கு மேற்பட்டவர்களை ஏமாற்றியதுடன் 1 கோடிக்கு மேல் பணம் பெற்று விட்டு தலைமறைவாக இருந்துள்ளமை  தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular