Monday, March 17, 2025

இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

- Advertisement -
- Advertisement -

அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் பொதுவாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பல அரச நிறுவனங்களின் அத்தியாவசிய பணிகளுக்காக ஒரு சில வாகனங்களை மாத்திரம் கொண்டு வருவதற்காகவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு இரண்டு பேருந்துகளும், சுகாதார அமைச்சுக்கு இருபத்தி ஒரு டபுள் வண்டிகளும், நடமாடும் மகப்பேறு மருத்துவ மனைகளுக்கு மூன்று வாகனங்களும், தொழிலாளர் அமைச்சுக்கு ஒரு வாகனமும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு மூன்று பயணிகள் பேருந்துகளும் மட்டுமே இதன் மூலம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். .

இவை அனைத்தும் வெளிநாட்டு உதவியின் அடிப்படையிலேயே இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular