- Advertisement -
- Advertisement -
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 12 நாட்கள் சர்வதேச பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதற்காக இன்று (13.01) அவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 12 நாள் பயணத்தில், டாவோஸ், சுவிட்சர்லாந்து மற்றும் உகாண்டாவில் நடைபெறும் இரண்டு உச்சி மாநாடுகளில் ஜனாதிபதி பங்கேற்கிறார்.
துபாய் சென்றுள்ள ஜனாதிபதியும் அவரது பாரியாரும் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் சுவிட்சர்லாந்து செல்லவுள்ளனர்.
இந்த இடைப்பட்ட நாட்களில் நாட்டை வழிநடத்துவற்காக பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களையும் நியமித்திருப்பதாக அறிய முடிகிறது.
- Advertisement -