Friday, March 28, 2025

இலங்கை பெண்கள் வெளிநாடு செல்ல தடை : விரைவில் வரவுள்ள புதிய சட்டம்!

- Advertisement -
- Advertisement -

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெண்கள் நாட்டிற்குள் விட்டு வெளிநாடு செல்வதை தடுக்கவும், பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறு குழந்தைகளை உடைய தாய்மார்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஏழாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் மற்றும் பெண்கள் நீதிமன்றில் ஆஜராகும்போது அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்காக வீடியோ தொழில்நுட்பம் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular