- Advertisement -
- Advertisement -
ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் செப்டெம்பர் மாதமும் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதமும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
நேற்று (09.01) பிற்பகல் குறித்த குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதமும் பாராளுமன்றத் தேர்தல் 2025 ஜனவரியில் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குழுவிடம் தெரிவித்துள்ளார்.
- Advertisement -