- Advertisement -
- Advertisement -
வவுனியா வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் மாடுகளை கடத்த முயன்ற மூவர் இளைஞர்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நெளுக்குளம் பாலமைக்கல் பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு மாடுகளை கடத்தி கற்பகபுரம் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் கட்டி வைத்துள்ளனர்.
இதனை அவதானித்த இளைஞர்கள் குறித்த நபரினை பிடித்ததுடன் அவருடன் தொடர்புடைய மற்றைய நபரினையும் வரவழைத்து பிடித்து இருவரையும் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்
கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரும் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களே குறித்த மாடு கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -