Friday, April 4, 2025

வவுனியாவில் மூவர் அதிரடியாக கைது!

- Advertisement -
- Advertisement -

வவுனியாவில் இன்று காலை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூவரை பொலிஸாரின் விசேட புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரும் இனைந்து கைது செய்துள்ளனர்.

இதேவேளை விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஸ்கேனர் இயந்திரம் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

34 வயதுடைய மதாவாச்சியை சேர்ந்த வைத்தியர் , 38வயதுடைய வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த நபர் மற்றும் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 31வயதுடைய இளைஞர் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்ட நபர்கள் ஆவர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் விசாரனைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA