Tuesday, April 1, 2025

கண்ணீருடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த செர்பிய பிரஜை!

- Advertisement -
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வந்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரின் விமான சீட்டு மற்றும் கடவுச்சீட்டு அடங்கிய பையொன்று திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேர்பிய நாட்டு பிரஜை ஒருவர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு நாட்டுக்கு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர், கொழும்பு கோட்டைக்கு தொடருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, நேற்றைய தினம் குறித்த பயணப் பை கொள்ளையிடப்பட்டுள்ளது.

களுத்துறை-தெற்கு தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்தில் இருந்து நபர் ஒருவர் தமது பயணப்பையை எடுத்துக்கொண்டு தப்பியோடியதாக குறித்த சேர்பிய நாட்டு பிரஜை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பையில் விமான சீட்டு, மடிக்கணினி மற்றும் 200 யூரோக்கள் இருந்ததாக தமது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். தனது முக்கிய ஆவணங்கள் தொலைந்ததால் அவர் கண்ணீருடன் காவல் நிலையம் அருகில் நின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular