- Advertisement -
- Advertisement -
நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று (08.01) இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
குறிப்பாக வடமத்திய மாகாணத்தில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், மற்ற பகுதிகளில், பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீற்றர் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் மக்களை கோருகிறது.
- Advertisement -