Tuesday, April 1, 2025

மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான ரயில் பாதை தற்காலிகமாக நிறுத்தம்!

- Advertisement -
- Advertisement -

வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான பாதை இன்று (07) முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான வீதி 06 மாத காலத்திற்கு மூடப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே குறிப்பிட்டார்.

அதன்படி இன்று முதல் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்தில் இருந்து காங்கசந்துறை வரை மட்டுமே புகையிரத சேவைகள் இடம்பெறும் என என்.ஜே.இண்டிபோலகே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு புகையிரதத்திற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு புகையிரதத்தையும் இவ்வருடம் சீர்செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய புகையிரத சேவையையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular