Tuesday, April 1, 2025

முல்லைத்தீவில் வாள் மற்றும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

- Advertisement -
- Advertisement -

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் வாள் மற்றும் போதை பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று (05.01.2024) மாலை குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய வேளை அவரிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஞ்சா, ஐஸ் போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மாணிக்கபுரம் பகுதியினை சேர்ந்த 29 அகவையுடைய நபரே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பொதி செய்யப்பட்ட கஞ்சா பொதிகள் நான்கும், ஐஸ் போதைப்பொருள் 600 மில்லிக்கிராம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் விசாரணையின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular