Tuesday, April 1, 2025

வரி எண்ணை பிரதேச செயலகங்களிலும் வழங்க நடவடிக்கை!

- Advertisement -
- Advertisement -

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களில் அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி எண் வரும் பெப்பரவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்லைன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைவரும் துரித கதியில் குறித்த எண்ணைபெற்றுக்கொள்ள இலகுவான வகையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, “உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் தேசிய அடையாள இலக்கத்தைக் குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் TIN இலக்கத்தைப் பெறலாம்.

அதை இலகுவாக்க பிரதேச செயலகங்கள் மூலம் வழங்கும் வேலைத்திட்டம் உள்ளது. இது திங்கட்கிழமை மற்றும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.

வரி செலுத்துவதில் சுமை இல்லை. பலர் பயப்படுகிறார்கள். மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்.” எவ்வாறாயினும், வரி ஏய்ப்பு செய்யும் பாரிய வர்த்தகர்களை பாதுகாப்பதன் மூலம் அரசாங்கம் அநியாயமாக வரிகளை வசூலிப்பதாக கட்சி பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular