விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், யோகி பாபு என அனைவரும் ஒருகாலத்தில் விஜய் தொலைக்காட்சியில் இருந்தவர்கள்தான். இன்று தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களாக உள்ளனர்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்தான் பழைய ஜோக் தங்கதுரை. விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட கலக்கப்போவது யாரு முதல் சீசன் முதல் இன்றுவரை விஜய் தொலைக்காட்சியில் உள்ளார் தங்கதுரை.
இவர் கூறும் ஜோக்குகள் பலசாக இருந்தாலும், இவர் கூறும் அந்த விதம், இவரது ஸ்லாங்த்தான் அனைவர்க்கும் சிரிப்பை வரவைக்கும். விஜய் டிவியில் எந்த ஒரு காமெடி ஷோ என்றாலும் அதில் தங்கதுரை நிச்சயம் ஆஜராவார்.
இவர் சொல்லிய ஜோக்குகள், எதுகை மோனை காமெடிகள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக வந்து பிரபலமடைந்தன. அதுமட்டுமில்லாமல் இவருடைய ஜோக்குகள் காமெடி பஞ்ச்கள் டிக்டாக்கில் இன்றும் பல மில்லியன் மக்களால் நடிக்கப்பட்டு ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
பழைய ஜோக் தங்கதுரைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அருணா என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்புதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
ஆனால் தங்கதுரை தன்னுடைய குழந்தை சம்பந்தமாக எந்த ஒரு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதில்லை. அதன் பிறகு சில நாட்கள் கழித்து குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. தற்போது டைகர் தங்கதுரையின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.