Wednesday, April 2, 2025

வவுனியாவில் ரணில் விஜயத்தை முன்னிட்டு அபிவிருத்தி குழுவிற்கு ஏற்பாடு!

- Advertisement -
- Advertisement -

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் (05.01) வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், வவுனியாவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கிற்கு 4 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்க நாளை (04.01) வியாழக்கிழமை விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் வியாழக்கிழமை பங்கேற்கும் அவர், வெள்ளிக்கிழமை (05.01) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் வவுனியாவில் இடம்பெறவுள்ளதுடன், மாவட்ட மட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரிகள் தொவித்தனர்.

அதன்பின், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அரச அதிகாரிகளால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular