உடனடி வீதித் தடையைப் பயன்படுத்தி வாகனங்களைச் சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசி மோசடி தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு-கொழும்பு வீதியில் இந்த அவசர வீதித் தடையை பயன்படுத்தி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த வேன் ஒன்றைசோதனையிட்டபோது, வேனுக்குள் ஏராளமான செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வேனில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தியதில், இந்த கையடக்கத் தொலைபேசிகள் வரிச்சலுகையின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
பயன்படுத்தப்படாத 246 கையடக்கத் தொலைபேசிகளும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட 77 கையடக்கத் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இருவரையும் வேனும் கைது செய்யப்பட்டு பேலியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
21 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்கள் கொழும்பு 12 மற்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.