Wednesday, April 2, 2025

மழை நிலைமை குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03.01) மற்றும் அடுத்த இரண்டு நாட்களில் மழைவீழ்ச்சி  தற்காலிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, தெற்கு, மேல் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சுமார் 2 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீற்றர்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular