பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குனர் மற்றும் நடிகரான வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி சிறந்த நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கிவருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களிலும் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிரேம்ஜி எப்போதும் மிகவும் ஜாலியாக இருப்பார். மேலும் அவர் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் மிகவும் வெளிப்படையாகவும் கலகலப்பாகவும் இருப்பார்.
பிரேம்ஜி, சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த வல்லவன் திரைப்படத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் சென்னை 600028, சரோஜா, கோவா போன்ற படங்களில் நடித்து இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இறக்கிறார். இவர் பேசிய ‘என்ன கொடுமை சார் இது’ ‘எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா’ போன்ற டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது.
இப்படி இருக்கும் நிலையில் நேற்று 2024 புத்தாண்டை முன்னிட்டு பிரேம்ஜி பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார் . அதில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இந்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் டாட் என்று பதிவிட்டு இருக்கிறார் .
இதை பார்த்த ரசிகர்கள் பொண்ணு யாரு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அவர் போட்ட பதிவை நீங்களும் பாருங்க.
Happy new year. This year I am getting married. Dot.
— PREMGI (@Premgiamaren) January 1, 2024