Wednesday, April 2, 2025

வவுனியாவில் புதுவருடத்தை முன்னிட்டு ஆலயங்களில் விசேட வழிப்பாடு!

- Advertisement -
- Advertisement -

நாடு முழுவதும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று(01)  காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் குட்சைட் வீதி கருமாரி அம்மன் ஆலயம் , வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம் , குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம் ஆகிய ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் , அடியவர்கள் நெய் எண்ணை ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் கலந்து கொண்டோர் தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

 

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular