நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த செயலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் அந்த பெண் பிரிந்து தனியாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் கடந்த சிலநாட்களாக அவரது மனைவியையும் அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருவதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இன்றையதினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் சென்று முறைப்பாட்டினையும் பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த நபர் இன்று மாலை தனது மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு சென்று வீட்டினை தீயிட்டு எரித்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொருக்கியுள்ளார்.
இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்துள்ளது. இதனையடுத்து ஒட்டுசுட்டான் பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.