சிபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளன.
இன்று (01.01) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 366 ரூபாயாகும்.
அதேபோல் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதன் புதிய விலை 464 ரூபாவாகும்.
ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 41 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேவேளை மண்ணெண்ணெய் விலை ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 11 முதல் ரூ. லிட்டருக்கு 236 ரூபாவாக பதிவாகியுள்ளது.
புதிய விலைத் திருத்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Petrol 92 Octane – Rs. 366
Petrol 95 Octane – Rs. 464
Auto Diesel – Rs. 358
Super Diesel – Rs. 475
Kerosene – Rs. 236