- Advertisement -
- Advertisement -
இந்த (2023)ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கடந்த 4 வருடங்களில் இந்த டிசம்பர் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.5 மில்லியனை எட்டியுள்ளது. இந்த நிலைமை அடுத்த வருடத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாஹு தெரிவிக்கின்றார்.
- Advertisement -