Thursday, April 3, 2025

வெலிகமவில் சுற்றிவளைப்புக்கு சென்ற அதிகாரி சுட்டுக்கொலை!

- Advertisement -
- Advertisement -

வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகம – பெலியான பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், வெலிகம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வேனை  துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular