- Advertisement -
- Advertisement -
உக்ரைனின் 05 நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய பாரிய ஏவுகணைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் சுமார் 160 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ஏவுகணைகள் கீவ், ஒடேசா, டினோபெடோவ்ஸ்க், கார்கிவ் மற்றும் லிவிவ் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் ஒரு மகப்பேறு மருத்துவமனை மற்றும் பல வீடுகள் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்துள்ளன.
போர் தொடங்கிய பின்னர், உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்திய மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல் இது என்றும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -