- Advertisement -
- Advertisement -
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க முடியாமல் துறைமுகத்தில் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து ஆராய்வதற்காக துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுக வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
.பண்டிகைக் காலம் காரணமாக உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் விநியோகிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்துக் கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பொருட்களை விநியோகிக்க முடியாமல் துறைமுகத்தில் குவிந்து கிடப்பது நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிப்பதாக கொள்கலன் போக்குவரத்துச் சங்கம் மேலும் தெரிவிக்கிறது.
- Advertisement -