எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் IMF, EFF வேலைத்திட்டம் அடுத்த 04 வருடங்களுக்கு தொடர வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் நிவாரணம் மற்றும் சர்வதேச நிதி உதவிகளைப் பெறுவதற்கு இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான நிதி நிலைத்தன்மை மீளாய்வு (FSR) தொடர்பாக மத்திய வங்கி வளாகத்தில் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கலாநிதி வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
IMF-EFF உடன்படிக்கையானது பொருளாதாரத்தையும் நிதி அமைப்பையும் நிலையான அடிப்படையில் வழிநடத்துவதற்கு அவசியம் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.