Wednesday, April 2, 2025

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும்!

- Advertisement -
- Advertisement -

நாட்டின் பல பாகங்களில் இன்று (30.12) அவ்வவ்போது மழை, அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைகளின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular