- Advertisement -
- Advertisement -
டெங்குக் காய்ச்சலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்புப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் ஆரம்பத்தில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மூளைச்சாவடைந்து உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -