- Advertisement -
- Advertisement -
வெலிக்கடை, வல்பொல பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
விருந்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வல்பொல, விஜிதபுர பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வல்பொல அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -