- Advertisement -
- Advertisement -
அஸ்வசும நலன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது இதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அப்போது நாம் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்களை இப்போது பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
மீளவும் 20 லட்சம் குடும்பங்கள் இதற்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறிய அவர்இந்த 20 லட்சத்தை 24 ஆக உயர்த்துவோம் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -