Monday, March 17, 2025

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

- Advertisement -
- Advertisement -

நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின்  அதிகாரப்பூர்வ கையிருப்பு அளவு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிகமாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்திற்கு அந்நிய செலாவணி வரவால் மொத்த கையிருப்பு கணிசமாக வலுப்பெற்றுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அரசாங்கம் 787 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணியாகப் பெற்றுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 337 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும் டிசம்பர் மாதத்தில் அரசாங்கம் இரண்டாவது தவணையாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular