- Advertisement -
- Advertisement -
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டுள்ளதுடன். குறித்த மாணவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கி பெற்றோரிடம் கையளிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 06 இளைஞர்களையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -