இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் தேவைப்பட்டால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இடம்பெற்று வரும் விசாரணைகளில் எந்தவொரு தரப்பினரும் தலையிடவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த மோசடி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்ய வேண்டும் என அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று (20.12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ, மருத்துவ வழங்கல் துறையின் விவகாரங்கள் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.