- Advertisement -
- Advertisement -
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் வில்லைகளுடன் இருவர் இன்று (20.12) காலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 18, ஆயிரம் சட்டவிரோத போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி மற்றும் தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இதன்போது கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 21 லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களும்,போதை வில்லைகளும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -