Tuesday, April 1, 2025

கூகுள் வழங்கிய தகவல் : கொழும்பில் முதன்முறையாக கைது செய்யப்பட்ட இளைஞன்

- Advertisement -
- Advertisement -

தனது உறவினரை 2 வருடங்களாக பாலியல் வன்புணர்வு புரிந்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் ஆபாச படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் சிறிலங்கா காவல்துறையளினருக்கு அறிமுகப்படுத்திய புதிய முறையின் மூலம் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் வசிக்கும் 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் உறவினரான 12 வயது சிறுமியே இந்த இளைஞனால் வன்புணர்விற்கு உள்ளாகியுள்ளார்.

இந்த சந்தேக நபர் சிறுமியை வன்புணர்வு செய்து காணொளி எடுத்து கூகுள் டிரைவில் பதிவேற்றியுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கூகுள் வழங்கிய தொடர்புடைய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது இதுவாகும் .

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular