- Advertisement -
- Advertisement -
மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் நலன்புரி சங்கம் பிரித்தானியாவினால் அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் நேற்று (19.12) வழங்கிவைக்கப்பட்டன.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு மற்றும் ஈச்சளவக்கை ஆகிய கிராம மக்களுக்கு உதவிகள் தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு அமைவாக மன்னார் நலன்புரி சங்கம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தன் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொருட்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கினர்.
இதன் போது குறித்த பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
- Advertisement -