கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளின் நுழைவுச் சீட்டுகளைத் திருத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அனுமதிச் சீட்டுகள் திருத்தும் பணிகள் நேற்றுடன் (19.12) நிறைவடையத் திட்டமிடப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
“நீங்கள் விண்ணப்பித்தது போல் பெயர் உள்ளதா என்று பாருங்கள்? பாடங்கள் சரியா? மீடியம் சரியா? பிறந்த திகதி சரியா? இங்கே பிழை இருந்தால் அவகாசம் கொடுத்துள்ளோம், டிசம்பர் 22ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் https://onlineexams.gov.lk/onlineapps/ என்ற இணையதளம் மூலம் அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளலாம். அதன் பிரதியை பெற நாங்கள் வாய்ப்பளிக்கிறோம் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.