- Advertisement -
- Advertisement -
ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (19.12) காலை புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதம் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் இயக்கத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் தாமதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -